திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி அம்பேத்கர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த திருவரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்த ரவுடி சூர்யா பிரகாஷ் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள் இரண்டு ஊசிகள் ரூபாய் 450 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த முகமது செலார்ஷா (வயது23),, நித்தின் (வயது25) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 8போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.

