அழகர் இறங்க தயாராகுது வைகை ஆறு

0 0

தளங்களை சீர்செய்யும் பணி தீவிரம்

மதுரை : உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அழகர்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கொட்டகை முகூர்த்தக்கால் ஊன்றும் விழா கடந்த ஏப்.17ம் தேதி நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அழகர் ஆற்றில் இறங்கும் இடமான ஆழ்வார்புரம் பகுதியில் கொட்டகை அமைப்பது மற்றும் தளங்களை சீர்செய்யும் பணிகள் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்த தண்ணீர் வைகை ஆற்றில் தடங்கல் இல்லாமல் செல்வதற்காக புதர்கள் மற்றும் ஆகாய தாமரைகளை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அழகர் ஆற்றில் இறங்குமிடத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாக கலெக்டர் பிரவீன் குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.