கஞ்சா விற்பனை செய்தவர் கைது

திருச்சி ராம்ஜிநகர் மில்க் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக கடந்த 15ந்தேதி எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ராம்ஜி நகர் மில்காலனி பகுதியை சேர்ந்த கோமதி (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

