திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக செசன்சு கோர்ட் போலீசாரக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்த கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த ஜோதி மணிகண்டன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல் திருச்சி பொன் நகர் ஜங்ஷன் பகுதியில் போதைபொருள் விற்றதாக கரூர் மாவட்டம் குளித்தலை நங்க வரம் பகுதியை சேர்ந்த மோகன் குமார் (வயது18) என்பவரை செசன்சு கோர்ட் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

