வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

திருச்சி மார்ச் 16 –
திருச்சி தென்னூர் பகுதி குப்பான்குளம் சின்ன கண்ணு தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 38. ) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி கடந்த இரண்டு வருடமாக தனியாக வசித்து வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

