திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது

0 0

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட இபி ரோடு, சத்தியமூர்த்தி நகர் அருகே மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் மலைக்கோட்டை தெற்கு பகுதி கழக செயலாளர் முன்னிலையில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கழக கொடியேற்றி புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரின் திரு உருவப்படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தி 1000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், பகுதி செயலாளர்கள் வாசுதேவன், ரோஜர், வெங்கட் பிரபு, சுரேந்தர்,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்திருச்சியில் வரும் 11ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதனை முன்னிட்டு திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாரதப் பிரதமர் மற்றும் புரட்சித் தமிழரின் வருகை முன்னிட்டு திருச்சி‌, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கழக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கழக‌ தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி, தலைமையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார், மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், அரியலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் கொறடா தாமரை ராஜேந்திரன், கழக அமைப்பு செயலாளர் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ இளம்பை தமிழ்செல்வன்
கழக அமைப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராஜ், இந்திரா காந்தி, பரமேஸ்வரி முருகன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.