மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதிலும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் திருக்குறள் பயிற்சிவகுப்புகள் நடைபெறத்திட்டம்

0 28

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டந்தோறும் திருக்குறளில் ஆர்வமும் புலமையும் மிக்க ஆசிரியர்கள்,பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பெற்று, அவர்களுக்குப் பயிற்சிவழங்கி தொடர் பயிலரங்குகள், பயிற்சிவகுப்புகள் நடத்தப்பெற்று ‘திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறத்திட்டம் வகுக்கப்பெறும் என்னும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பினைச் செயற்படுத்திடும்விதமாக தமிழ்நாடு முழுவதிலும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் திருக்குறள் பயிற்சிவகுப்புகள் நடத்தப்பெறவுள்ளன. அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சிவகுப்புகள் திருச்சிராப்பள்ளி, இலால்குடி,முசிறி என மூன்றுபகுதிகளாக பிரிக்கப்பெற்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒருகுழு என 03 குழுக்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இக்குழுக்களைக்கொண்டு திருச்சிராப்பள்ளி வாசவி வித்யாலயாப் பள்ளி இலால்குடியிலுள்ள நெஸ்ட் பதின்மப் பள்ளி மற்றும் முசிறியிலுள்ள எஸ்.பி பதின்மப் பள்ளி ஆகியவற்றில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் திங்கள் முதல் வாரம் முதல் நடத்தப்பெறவுள்ளன.

பயிற்சிக்கட்டணம் ஏதுமின்றி நடத்தப்பெறும் இப்பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடத்தப்பெறும் ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்பெற்று நிறைவுநாளன்று பயிற்சிபெற்றவர்களுக்குத் தமிழ்நாடுஅரசின் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவிப்பவர்கள் தங்களின் தன்விவரக்குறிப்புடன் ஆதார் அட்டையின் படியினை இணைத்து tamilvalar.try@gmail.com என்ற விண்ணப்பிக்கலாம். மேலும், திருச்சிராப்பள்ளி மின்னஞ்சல் முகவரி வழியாக மாவட்டத்திலுள்ள தமிழார்வலர்கள், தமிழமைப்புகள் (பதிவுசெய்யப் பெற்றவை பதிவுசெய்யப் பெறாதவை) தமிழறிஞர்கள் அனைவரையும் தங்களின் மாவட்ட அனைவரும் மேற்கூறிய நோக்கில் ஒருங்கிணைக்கும் தன்விவரக்குறிப்பினைத் துணை இயக்குநர் அலுவலகம், தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சியரகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரிக்கு அஞ்சல் வழியோ, நேரிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பெறுகின்றது திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மாணவ மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சிபெற்று பயனடையலாம்.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.