திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் :

கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க
வருகின்ற 17ஆம் தேதி விடியா திமுக ஆட்சியில் நிலவக்கூடிய பாலியல் வன்கொடுமைகள் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் போதைப் பொருட்கள் பழக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசை கண்டித்து, கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து வருவாய் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதன் அடிப்படையில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் திடலில் 17ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

மேலும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு கழகப் பணியாற்றி தேர்தல் வெற்றியை கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் பொற்கரங்களில் சமர்ப்பிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.மேலும் ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்த தேர்தல் அறிக்கையை வீடு வீடாக சென்று மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

