ஏறி இறங்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1600 குறைந்து ரூ.1,12,960க்கு விற்பனை : வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைவு

0 3

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 29ம் தேதி பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 3ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.2,560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,14,160க்கு விற்பனையானது.

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும், பவுனுக்கு ரூ.5 ஆயிரத்து 40 உயர்ந்து பவுன் ரூ.1 லட்சத்து 19,200க்கும் விற்றது.ஆனால் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,320க்கும், பவுனுக்கு ரூ.4,640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,14,560க்கும் விற்றது. இந்த நிலையில், இன்றைய காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120க்கு விற்பனையாகிறது.

Leave A Reply

Your email address will not be published.