சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்தது!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்த நிலையில் மீண்டும் ரூ.2,240 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,24,880க்கும், ஒரு கிராம் ரூ.15,610க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் ஏற்பட்ட தொடர் அழுத்தங்கள் காரணமாக இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1.22 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.400ஐ முதல் முறையாக எட்டியுள்ளது. இது இதுவரை இல்லாத உச்சமாகும்.
கடந்த நவம்பர் 1ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.90,480ஆக இருந்தது. இந்த விலை, டிசம்பர் 1ம் தேதி ரூ.96,560 ஆக அதிகரித்தது. டிசம்பர் 15ம் தேதி ஒரு லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை முதல் முறையாக கடந்தது. தங்கத்தின் விலை ஜனவரி 1ம் தேதி ரூ.99,520 ஆக இருந்தது.

