நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கி விடுமுறை

ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, அந்த நாளில் வங்கிப் பணிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை இருப்பதால், மொத்தம் 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது.
விடுமுறை விவரங்கள்:
ஜனவரி 24 – நான்காவது சனிக்கிழமை
ஜனவரி 25 – ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 26 – குடியரசு தினம்
ஜனவரி 27 – வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
இதனால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
எனவே வங்கியுடன் தொடர்புடைய அனைத்து அவசரப் பணிகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வாமனன் நியூஸ்

