பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைபெறும் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதில்,புகைப்படம் எடுக்கும் பெண் ரோபோ,புதுவகை ராட்டினம் மற்றும் குழந்தைகளோடு நடனமாடும் ரோபோடிக் நாய் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில், இன்று காலை டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
அமைக்கப்பட்ட இடம்:
திருச்சி கே.கே. நகர் சாலையில் எல்ஐசி காலனி, சபரி மில் பேருந்து நிறுத்தம் அருகே டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த பொருட்காட்சியை இன்று காலை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த திறப்பு விழாவின் போது, பொருட்காட்சி சங்கத் தலைவர் அன்வர் ராஜா, கப்பல் வடிவமைப்பாளர் மதுரை ஆர்டிஸ்ட் சரவணன், ஏர்போர்ட் சலீம், பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், நாகர்கோவில் பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் சுதாகரன் கூறுகையில்:-
இன்று முதல், பொருட்காட்சி செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பொருட்காட்சி நடைபெறும்.
டைட்டானிக் கப்பல் போன்றே தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு, மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றெவாறு அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மக்கள் பயனடையும் வகையில் பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பொருட்காட்சியில் பாட்டுக்கேற்றவாறு குழந்தைகளோடு நடனமாடும் ரோபோடிக் நாய், புகைப்படங்கள் எடுக்கும் ரோபோட்டிக் பெண் இடம்பெற்றுள்ளது.
ஜிக்ஜாக் என்ற புது வகையான ராட்டினம் ஏற்பாடு போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கே நிறைந்து உள்ளது .
ஏற்கனவே, திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் துபாய் கண்காட்சி, அழகிய மீன்கள் உலகம் போன்ற பல்வேறு நடத்தி உள்ளோம் என கூறினார் சுதாகர் .


