திமுகவின் பிரச்சாரப் பாடகர் புகழ்பெற்ற நாகூர் இ.எம்.அனிபா நூற்றாண்டு நிறைவு விழா.

0 3

திமுகவின் பிரச்சாரப் பாடகர், இஸ்லாமிய இறைவுணர்வு பாடல்கள், திரைப்படங்களில் பாடி பெரும் புகழ்பெற்ற நாகூர் இ.எம்.அனிபா நூற்றாண்டு நிறைவு விழா – கருத்தரங்கம் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி – எம்.எஸ் ஜார்ஜ் அரங்கில் இன்று (09.01.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் யாவரும் கேளீர் மாத இதழ் இணைந்து நடத்திய இவ்விழாவில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் அருள்தந்தை எஸ்.லூயிஸ் பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மண்டல குழு தலைவர் மாநகர செயலாளர் மு.மதிவாணன் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.உமாமகேஸ்வரி, யாவரும் கேளீர் இலக்கிய மாத இதழின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொறுப்பாளர் கவிஞர் கோ.கலியமூர்த்தி, நாகூர் அனிபா இசைக் குழுவில் கீ-போர்டு வாசித்த DSS கென்னடி, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவன், ஆகியோர் கருத்தரங்க உரை நிகழ்த்தினார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் சிறப்பு விருது பெற்ற திருச்சி தி.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக, கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் கி.சதீஷ்குமரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்க செயலரும் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் ரெ.நல்லமுத்து நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிறைவாக நன்றியுரை நிகழ்த்தினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர், பத்திரிக்கையாளர் ஜெ.டி.ஆர். ஒருங்கிணைத்தார்.
இவ்விழாவில், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி முன்னாள் மாணவர் பி.பாஸ்டின்ராஜ் எழுதிய அனிபாவின் இசைப் பணிகள் என்ற நூலை, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டு விழா பேரூரையாற்றினார்.
“இசைமுரசு நாகூர் இ.எம். அனிபாவின் நூற்றாண்டை தமிழக அரசுக்கு அடுத்து, அதுவும் ஒரு கல்லூரியின் சார்பில் நடைபெறும் விழா இது ஒன்றாகத்தான் இருக்கும். மத நல்லிணக்கத்தின் அடையாளமாக, இதுதான் இந்தியா என்று சொல்லும்விதமாக இந்த விழா இங்கே நடைபெறுகிறது. 5000-க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடிய பாடகர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் பிறந்த நாகை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் பெருமையாக கருதுகிறேன். அவர் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்டியிருக்கிறோம்.
1953-இல் தமிழகத்தில் நெசவாளர்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டபோது, திருச்சியின் தெப்பக்குள வீதியில் நெசவுத்துணிகளை சுமந்து கொண்டு அதை விற்று அதில் கிடைக்கும் வருவாயை நெசவாளர்களின் நலனுக்கு சென்று சேர வேண்டுமென்ற களத்தில் இறங்கினார் அறிஞர் அண்ணா. அவருடன் இணைந்து பாட்டுப்பாடி நெசவுத்துணிகளை விற்றவர் நாகூர் அனிபா. அவர்களுடன் உடன் சென்றது எனது தாத்தா அன்பில் தர்மலிங்கம். இன்று அவருடையை பேரனாக இந்த விழாவில் பங்கேற்றிருக்கிறேன்.” என்பதாக நெகிழ்வான உரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.