தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

0 3

 சென்னையில் இன்று (ஜனவரி 02) தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. நம் நாட்டில் அவற்றின் விலைகள் புதிய உச்சத்தை எட்டின. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) ஆபரண தங்கம், கிராம் 12,480 ரூபாய்க்கும், சவரன், 99,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 257 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (ஜனவரி 01), தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சவரனுக்கு, 320 ரூபாய் சரிவடைந்து, 99 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் குறைந்து, 256 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (ஜனவரி 02) தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 580 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோக்கு 4 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.