திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை பயன்படுத்திய பொதுமக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளாச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம் இன்னுயிர் காக்கும் -நம்மைக் காக்கும் 48. புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வா, கலைஞரின் கனவு இல்லம் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் கடைக்கோடியில் வாழக்கூடிய நபாகளுக்கும் சென்றடையும் வண்ணம் செயல்படுத்தி வருகிறது இந்நிலையில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் இவ்வரசு செயல்பட்டு வருகிறது
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நிகராக அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய பேருந்து முனையமாக 38 ஏக்கர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தரைத்தளத்தில் 124 பேருந்துகள், நீண்ட நேர நிறுத்த பேருந்துகள் 141.குறைந்த நேர நிறுத்த பேருந்துகள் 80 என 345 வெளியூர் பேருந்துகளும், முதல் தளத்தில் 56 உள்ளுர் நகரப் பேருந்துகளும் என மொத்தம் 401 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக பேருந்து முனையத்தின் தரைதளம் முற்றிலும் குளிரூட்டும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. காற்றுமாசினை கட்டுப்படுத்தி குளிர்ந்த சூழலை ஏற்படுத்தும் வகையில் பேருந்து முனையத்தைச் சுற்றிலும் பசுமை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்து முனையம் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இப்புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தினசரி போக்குவரத்துக் I கழகம் திருச்சி தமிழ்நாடு அரசு மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் முக்கிய நகரப்புற வழித்தடங்களான பாலக்கரை, தில்லைநகர் உறையூர் மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம், வயலூர் ஸ்ரீரங்கம். சமயபுரம் திருவெறும்பூர் துவாக்குடி ஆகிய வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப பகல் மற்றும் இரவு நேரங்களில் போதுமான பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இவ்வழித்தடங்களில் அதிகாலை 3.00 மணி முதல் காலை 10.00 வரை தற்சமயம் இயக்கப்படும் நடைகளை விட கூடுதலாக 196 நடைகள் அதிகரித்து இயக்கப்பட உள்ளது.
மேலும் இப்புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தினசரி அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட முக்கிய நகரங்களான தஞ்சாவூர். கும் கும்பகோணம், வேளாங்கண்ணி புதுக்கோட்டை இராமேஸ்வரம்,சென்னை பெங்களூரு. நாமக்கல், சேலம், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர். திண்டுக்கல், பழனி, குமுளி மதுரை திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய மார்க்கங்களில் புறநகரப்பேருந்துகள் இயக்கம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இப்புதிய பேருந்து முனையத்தில் 24 மணி பணி நேரமும் அலுவலர்கள் பரிசோதகர்கள் மற்றும் பணியாளர்கள் சுழற்சி முறையில் அமர்த்தப்பட்டு பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சீரான பேருந்து இயக்கம் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது
திருமதி.சித்ரா

வணக்கம் எனது பெயர் சித்ரா, நான் வள்ளியூரிலிருந்து திருச்சிக்கு உறவினர் வீட்டிற்கு எனது குடும்பத்துடன் LALISTBILD செய்தேன் இப்போழுது தான முதல்முறையாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு வருகை புரிந்து குளிரசாதன வசதிகளை பார்த்து வியந்தேன இது கனவா, நிஜமா என தெரியவில்லை இங்கு இருந்து வெளியில் செல்ல எனக்கு மனமில்லை. மிகவும் சுகாதாரமாக இருந்தது பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்டுள்ளது. “எல்லோர்க்கும் எல்லாமும்” என்ற கனவு நினைவாகி வருகிறது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச்சர் அவர்களுக்கு எனது வணக்கத்தையும் மனமார்ந்த நன்றியையும் நிறைந்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு. மணிகண்டன்

எனது பெயர் மணிகண்டன். நான் சேலம் மாவட்டத்திலிருந்து வருகிறேன். நான் பேருந்து முனையத்தை கண்டவுடன் அதில் உள்ள வசதிகளும், பல்வேறு சிறப்பம்சங்களும் வியப்படைய வைத்தது.மிகவும் சுத்தமாக மற்றும் பெரும் வசதிகளுடன் அமைந்துள்ளது. இது போன்ற ஒரு நவீன பேருந்து முனையத்தை நான் எங்கும் கண்டதில்லை. அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் பொதுமக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும். அதிக பேருந்துகள் நிற்பதற்கு மிக பெரிய இட வசதி உள்ளது . அதிக பரப்பளவு கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. இதுபோன்ற சிறப்பான பேருந்து முனையத்தை கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அவரது அனைத்து நன்றியை வாழ்த்துக்கள் முயற்சிகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் நெஞ்சார்ந்த அளவு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு.பாலாஜி

எனது பெயர் பாலாஜி, நான் காரைக்குடியிலிருந்து வருகிறேன். நான் தற்பொழுது பஞ்சப்பூர் ஒருங்கினைந்த பேருந்து முனையத்திற்கு எனது குடும்பத்துடன் வந்தேன். பார்ப்பதற்கு மிகவும் அருமையாகவும் கவரும் வகையிலும் உள்ளது. அதிக பரப்பளவு கொண்டதாகவும் மிகவும் சுகாதாரமாகவும், பளிச்சென்று உள்ளது. பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்டு பார்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பேருந்து முனையம் அனைத்து பகுதி மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பேருந்து முனையத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை நிறைந்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

