மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (28.07.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பாக செரிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்துதலை ஊக்குவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ஜெகதீஸ் சந்திரபோஸ், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

