திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்

0 3

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.அ.ப., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (09.12.2025) திறக்கப்பட்டு 400 (Ballot Unit) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரியலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.ஹென்ரி பீட்டர், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் திரு.சாலை தவவளன், தேர்தல் வட்டாட்சியர் திரு.சக்திவேல் முருகன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.