திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப..அவர்கள் தலைமையில் இன்று (01.12.2025) நடைபெற்றது.

0 5

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப..அவர்கள் தலைமையில் இன்று (01.12.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடர்பான மனுக்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித் தொகை,விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை. மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகைகள் பெறுவது தொடர்பான மனுக்கள், தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடர்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை, வங்கி கடன், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தையல் இயந்திரம். சலவைப்பெட்டி வேண்டி விண்ணப்ப மனுக்கள் மேலும் ஓய்வூதிய பயன், தொழிலாளர் நல வாரியம் தொடர்பான மனுக்கள், வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 454 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (01.12.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தசை சிதைவு, முதுகு தண்டுவடம் மற்றும் நரம்பியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 06 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூபாய் 6.86 இலட்சம் மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.பாலாஜி, துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.உ.பாரூக், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் திருமதி.இலக்கியா. மாவட்ட பழங்குடியின நல அலுவலர் திரு.ரங்கராஜன், தனித்துணை ஆட்சியர் (நிலம் எடுப்பு) நெடுஞ்சாலை திரு.சரவணன். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.பா.ஸ்ரீராம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.இரா.இரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.