திருச்சி தெற்கு மாவட்டத்தில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம் !

கழக முதன்மைச் செயலாளர் – அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு ! மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை ! “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம்

பொருள்
1. கழக தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பணிகள் குறித்து .
2.கழக ஆக்க பணிகள் குறித்து
வியாழக்கிழமை மாலை 04.00 மணியளவில் திருச்சி “கலைஞர் அறிவாலயத்தில்” எனது தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர் – மண்டல பொறுப்பாளர் – அமைச்சர் – கே.என்.நேரு அவர்கள் பங்கேற்று வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார்.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தொகுதி பார்வையாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநகர, நகர, பேரூர் வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல்கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

