திருவெறும்பூர் கிருஷ்ண சமுத்திரம் முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழகம்முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் முதல் நிலை ஊராட்சியில் குமரேசபுரம் கிருஷ்ண சமுத்திரம் எழில் நகர் கணேசபுரம் திருவேங்கடநகர் தொண்டமான்பட்டி ஆகிய பகுதிகளை கொண்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் சுமார் 20,000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்
மேலும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கிறிஸ்ணசமுத்திரம் ஊராட்சியில் நகர் பகுதியில் உள்ள பெல் ஓய்வு பெற்றோர் சங்க அலுவலகத்தில் உங்களுடன்
ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு
முகாமில் அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து
பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்
மேலும் முகாமில் வருவாய்த்துறை சார்பாக நத்தம் பட்டா 6 பேருக்கும் இதே போல் வகுப்பு வாரிசான்றிதழ் மூன்று பேருக்கும் மருத்துவ காப்பீடு அட்டை இரண்டு பேருக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்
மேலும் இந்தமுகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை ஊராட்சி செயலாளர் திவ்யசீலன். திருவெறும்பூர் ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி திருச்சி தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் உட்பட ஊராட்சியைச் சார்ந்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

