திருவெறும்பூர் தொகுதி திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்று வார்டு எண் 44 உட்பட்ட பகுதி மக்களுக்கு ஏ ஆர் என் திருமண மண்டபம் மேல கல்கண்டார் கோட்டை பகுதியிலும் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

0 4

 

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌.

தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பட்டா பெயர் மாற்றம் மற்றும் கோரிக்கைகள் மீதான தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகத்தையும் வழங்கினார்.

அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இந்தமுகாமில் மண்டல 3ன்குழு தலைவர் மு மதிவாணன். மாநகராட்சி உதவி ஆணையர் V.சரவணன், ஜெகஜீவராமன் உதவி செயற்பொறியாளர்சுந்தரவடிவேது இளநிளை பொறியாளர் மாமன்ற உறுப்பினர்கள் Em. தர்மராஜ், பியூலா மாணிக்கம்,
வட்ட செயலாளர்கள் துரை, சுப்பிரமணி, மற்றும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.