நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துவாக்குடி நகராட்சியில் துவக்கி வைத்தார்.

0 4

துவாக்குடி நகராட்சியின் சார்பில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை நடத்தும் “மக்களை நாடி மருத்துவ சேவைநலம் காக்கும் ஸ்டாலின்மாபெரும் மருத்துவ முகாம்மை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துவாக்குடி பகுதியில் அமைந்துள்ள புனிதவளனார் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் முகாமைை துவக்கி வைத்து முகாமில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மருத்துவத்துறையின் அரங்குகளில் மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

இம்முகாமில் துவாக்குடி நகர் மன்ற தலைவர் காயம்பு கி.ஆ.பெ.விஸ்வநாதன அரசு மருத்துவகல்லூரி முதல்வர் DR.குமரவேல் நலப்பணிகள் ணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நல அலுவலர் DR.கோவிநாத் DR. வேஹமசந்த் காந்தி மாவட்ட சுகாதார அலுவலர் DR. பாலமுருகன் வட்டார மருத்துவ அலுவலர் நவல்பட்டு 17 துறைகள் சார்ந்த சிறப்பு மருத்துவ அலுவலர்கள் பொது சுகாதாரம், நகராட்சிபணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் பங்கு பெறும் பொது மக்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், பெண்கள் நல மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல் மற்றும் குழந்தைகள் நல மருத்துவம், கண் மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சேவைகளும் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளும் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படுகின்றனர்.

மேலும் இந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், இரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை, சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனைகளும் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டது .

இந்த முகாமில் துவாக்குடி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முதியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.