சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபருக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது

0 6

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய . குற்ற எண் 33/20, U/s 5(1), 5(1)(ii) r/w 6 of POCSO Act  வழக்கில் கல்லகுடி பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியிடம் (வயது 17/20) திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்த ஸ்டீபன் ராஜ் 27/20, S/o செல்வராஜ், அண்ணா நகர், புள்ளம்பாடி, லால்குடி TK (மெக்கானிக் தொழில்) என்பவரை 22.12.2020-ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

இந்நிலையில் திருச்சி மகிளா நிதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞராக சுமதி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (29.09.2025) திருச்சி மகிளா நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முக பிரியா அவர்கள் எதிரி ஸ்டீபன் ராஜ் என்பவருக்கு 20 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 20,000/- அபராதம் விதித்தும், அபராத தொகை கட்ட தவறும் பட்சத்தில் எதிரிக்கு கூடுதலாக ஆறு மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.