மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.9.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் 39 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவிலான 146 நூலகக் கட்டடங்களை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.9.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் 39 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவிலான 146 நூலகக் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, கள்ளக்குறிச்சி நகரில் 4 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட மைய நூலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திரு.திண்டுக்கல் ஐ. லியோனி, பொது நூலக இயக்குநர் (மு.கூ.பொ) திருமதி ச. ஜெயந்தி, இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் (பொ) மருத்துவர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர்-செயலர் முனைவர் சி. உஷாராணி, பொது நூலக இணை இயக்குநர் திரு.ச.இளங்கோசந்திரகுமார் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உதவி இயக்குநர் முனைவர் ப. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

