நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா.

0 4

தேசிய செட்டியார்கள் பேரவை என்ற அமைப்பை கடந்த 15 ஆண்டுகளாக தொடங்கி தமிழக முழுவதும் கிளைகள் இல்லாத கிராமம். இல்லை என்று சொல்லும் அளவுக்கு கட்டமைப்பை உருவாக்கி மக்களுக்கான பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டோம்.
இந்த நிலையில் செப்டம்பர் 10ந் தேதி மதுரையில் புதிய அரசியல் கட்சியாக நமது மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்தோம். இந்த கட்சியானது அனைத்து தரப்பு மக்களும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற உள்ளத நோக்கத்தோடும். அனைத்து தரப்பும் மக்களுக்கான அரசியல் கட்சி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்.
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கம்பீரம், எங்களின் அடையாளமாக திகழக்கூடிய கட்சிக்கொடி அறிமுக விழா இன்று 17.09.2025 திருச்சியில் உள்ள தனியார் அரங்கில்: நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நமது மக்கள் முன்னேற்றக் கழககிலின் நிறுவன தலைவர் மனிதநேயர் பி.எல். ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார். கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பேசியதாவது, கொடிதான் ஒரு கட்சியின் முகம். அதுதான் கொள்கை கோட்பாட்டின் வடிவம். அதுதான் நமது அடையாளம், கொடியில் இடம்பெற்றிருக்கும் வண்ணங் களுக்கும் குறியீட்டிற்கும் ஆழமான பொருள் உண்டு
நமது கொடியில் மூன்று வண்ணங்கள், மேலே பச்சை, நடுவில் மஞ்சள், கீழே சிவப்பு. கொடியின் மத்தியில் பெருவிரலை உயர்த்தி காட்டும் வெற்றிக் குறியீடு. கொடியில் பச்சை நிறம் என்பது தூய நீர், தூய மண் வளம், தூய காற்றின் குறியீடாகவும், விவசாயிகளின் மேம்பாடு நீர்நிலை ஆதாரங்கள் விரிவு படுத்துதல் புதிய அணைகள் கட்டி விவசாயத்தில் தண் நிறைவு பெற்ற வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை கொண்டு வருதல். புத்துணர்ச்சியும் மனதில் நம்பிக்கை உணர்வையும் மேலோங்க செய்கிறது.

மஞ்சள்நிறம் என்பது மங் களகர மானது உடல் ஆரோக்கியம் பொருளாதார மேம்பாடு, ஒவ்வொரு தொண்டனின் உடல் ஆரோக்கியம், சந்தோஷத்தின் குறியீடு. சிகப்பு நிறம் என்பது தேச பாதுகாப்பு வலிமை வாய்ந்த இந்திய ராணுவ கட்டமைப்பு அனைத்து உரிமைகளுக்கும் போராடக்க்ஷய குறியீடு, எதையும் தைரியத்துடன் எதிர் கொள்ளுதல் வாழ்க்கையில் ஒவ்வொரு தொண்டனும் ஒவ்வொரு விஷயந்தை தைரியத்துடன் எதிர் கொள்ள வேண்டும்.


இந்த மூன்றையும் உள்ளடக்கி நடுவில் இருக்கக்கூடிய உயர்த்திய கட்டை விரல் அனைத்திலும் வெற்றி என்பதின் அடையாளமாகும். புதிதாக கட்சி தொடங்கியதில் நோக்கம் என்னவென்றால தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பல்வேரு கோரிக்கை வலியுறுத்தி கையேத்தி வந்தது போதும் அனைத்து தரப்பு மக்களும் அரசியல் அதிகாரம் பெற்று கையெழுத்திடும் காலத்தை உருவாக்குகின்ற முதன்மை கட்சியாக விளங்கும்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு. கள் இறக்க அனுமதி அளித்தல், வேலை வாய்ப்புடன் கூடிய கல்வியை அனைவருக்கும் அளித்தல் நீர்நிலை ஆதாரங்களை விரிவுபடுத்தி பதிய அணை கட்டுதல் விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விவசாயிகளை விலை நிர்ணயம் செய்தல், தூய நீர், தாய காற்று தூய மண்வாத்தை பேணுதல்
இந்திய கப்பல் படையில் அதிகளவில் மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட எங்கள் கட்சியின் கொள்கைகளாக ஏற்று வருகின்ற 2036 ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஒத்த கருத்துடைய காட்சிகளோடு கூட்டணி ஆட்சிக்கு தயாராக உள்ள கட்சிகளோடு கூட்டணி அமைத்து தோதவில் போட்டியிடுவோம்.
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்காதேவி ணகி கோவிலை புவரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடதத வலியுறுத்தி கண்ணகி பிறந்த மண் பூம்புகாரில் இருந்து சுமார் 470 கிலோ மீட்டர் தூரம் 10 ஆயிரம் தொண்டர்களோடு கால் சிலம்பு ஏந்தியவாறு நீதி யாத்திரை விரைவில் நடத்த உள்ளோம்.

Leave A Reply

Your email address will not be published.