வன்கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததுதொடர்பாக,


திருச்சிராப்பள்ளி மாவட்டம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை 1.பிரகாஷ்(25), த.பெ.ராமசாமி வளநாடு. 2 ரமேஷ்(25), த.பெ. ராசு. வளநாடு என்பவர்கள் வலுக்கட்டாயமாக தூக்கிசென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்படி எதிரிகள் மீது மணப்பாறை . 15/22 u/s 376, 323, 506(II) IPC r/w 3(1)(r)(s), 3(1)(w)(1), 3(2)(va) SC ST Act 1989 ன் படி 07.07.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (I ADJ) நடைபெற்று வந்தது.
2. மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திருசக்திவேல் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (16.09.2025) திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு.சுவாமிநாதன் (I-AD]) அவர்கள் எதிரி பிரகாஷ்(25), த.பெராமசாமி மற்றும் எதிரி-2 ரமேஷ்(25), த.பெ. ராசு, ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய். 20,000 அபராதமும், வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
3. இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கவிதா மற்றும் நீதிமன்ற பெண் தலைமை காவலர் திருமதி. கீதா ஆகியஇருவரையும் திருச்சிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இகாப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

