உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மேற்பார்வையிட்ட; ஆட்சித்தலைவர் வே. சரவணன் : திருச்சி.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், எதுமலை SKD திருமண மண்டபம் மற்றும் பிச்சாண்டார் கோவில், உத்தமர்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இன்று (09.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.07.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நவம்பர் 14 ந் தேதி வரை மாநகராட்சி பகுதிகளில் 32 இடங்களிலும், முசிறி, துறையூர், இலால்குடி, துவாக்குடி மற்றும் மணப்பாறை ஆகிய நகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும், 14 பேரூராட்சிப் பகுதிகளில் 28 இடங்களிலும், 14 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 243 முகாம்கள் என மொத்தம் 351 முகாம்கள் நடைபெறுகிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் 108 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 243 முகாம்களும் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், துறையூர் வட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட செங்குந்தர் துவக்கப்பள்ளியிலும், ஸ்ரீரங்கம் வட்டம் காவல்காரபாளையம் TR திருமண மண்டபத்திலும், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார் கோவில் உத்தமர்கோவில் திருமண மண்டபத்திலும், இலால்குடி வட்டம் காட்டூர் MS மஹாலிலும், மண்ணச்சநல்லூர் வட்டம், SKD திருமண மண்டபத்திலும், இலால்குடி வட்டம், மால்வாய் மேல்நிலைப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்று (09.08.2025) மண்ணச்சநல்லூர் வட்டம், எதுமலை SKD திருமண மண்டபம் மற்றும் பிச்சாண்டார்கோவில், உத்தமர்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் பதிவுசெய்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் ,வே.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவாக பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

