உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்ப‌ட்டது

0 2

 

திராவிட_மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட மாண்புமிகு முதலமைச்சர்மு.க.ஸ்டாலினின் உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம், திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சிக்கு மண்டலம் 2, வார்டு எண்47,48 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகம் பொன்மலைப்பட்டி ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
           அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உடனே தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளைப் பயனாளிகளிடம் வழங்கினார்.
சொத்து வரி பெயர் மாற்றம் உத்தரவு ,புதிய சொத்து வரி விதிப்பு உத்தரவு, பட்டா உத்தரவு
ஆகியவை இந்நிகழ்வில் வழங்கப்பட்டது‌‌ .

மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து
பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.
முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர்மு.மதிவாணன், மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா மாமன்ற உறுப்பினர் தர்மராஜ் உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி மற்றும்வட்ட கழக செயலாளர்கள் வரதராஜன்,ஜமால்முகமது, நாகவேணி, மாரிமுத்து, மனோகர், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்‌.

Leave A Reply

Your email address will not be published.