திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை,அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பத்தாளபேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் முன்னிலையில் இன்று (07.08.2025) தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

