ஒரு கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது.

ஒரு கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது.. சிறை.
* கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
* அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசங்கரன் அவர்கள் மேற்பார்வையில் பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் அவர்கள் தலைமையில் இறச்சகுளம் பகுதியில் ரோந்து செய்து வரும் போது சந்தேகத்திற்கிடமாக நின்ற
* இறச்சகுளம் பாரதி தெரு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ராஜவேல்(37)
* இறச்சகுளம் விஷ்ணுபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகன் தமிழரசன் (21)
* என்பவர்களிடம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோவுக்கும் அதிகமான அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

