வாரத்துவக்கத்தில் சரிந்தது தங்கம் விலை சவரன் ரூ.79,760க்கு விற்பனை

0 8

 

வர்த்தக வாரத் துவக்கத்தில் தங்கம் விலை ரூ.280 குறைந்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால், கடந்த மாத இறுதியில் இருந்து, நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையாகியது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,600 அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று கொஞ்சம் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனையாகி வருகிறது. இதன்மூலம், தங்கம் விலை ரூ.80 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. அதேபோல, கிராமுக்கு, ரூ.35 குறைந்து, 9,970க்குக்கு வர்த்தகமாகி வருகிறது.

தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்திருப்பது ஆபரணப் பிரியர்களிடையே கொஞ்சம் நிம்மதியளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.