இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரின் மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை – நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரணை.
அனைத்து தரப்பினரின் வாதங்களைக் கேட்டு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறோம்; வரும் 12ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு – நீதிபதிகள். விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்; வெள்ளிக்கிழமை வழக்குகள் விசாரிக்கப்படும். அதன்பின்னர் புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது – இரு நீதிபதிகள் அமர்வு. அரசு தரப்பு கோரிக்கை ஏற்று மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஐகோர்ட் மதுரைக் கிளையில் டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. அனைத்து தரப்பினரின் வாதங்களைக் கேட்டு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறோம், உத்தரவுகள் பிறப்பிக்க கோரி நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம் – நீதிபதிகள்

