DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் – மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாள்

0 5

DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் – மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 48 நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது அதன் முதல் நிகழ்வாக திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 234 பேருக்கு சீருடை மற்றும் உணவு வழங்கும் விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது .

இந்த நிகழ்வில் மாநகராட்சித் துணை மேயர் G.திவ்யா,
மண்டல குழு தலைவர் P.ஜெயநிர்மலா தலைமை வைத்தனர்.

மாநகராட்சி மண்டல குழு தலைவர் – மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலை வகித்தார்

நடைபெற்ற கூட்டத்தில்
தூய்மை பணியாளர்களுக்கு
கழக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு,
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உரை நிகழ்த்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், வண்ணை அரங்கநாதன்,
மாவட்டக் கழக நிர்வாகிகள்
N.செந்தில்,
அ.த.த.செங்குட்டுவன், லீலாவேலு,
பகுதி கழகச் செயலாளர்கள்
மருந்துகடை மோகன்,
டி.பி.எஸ்.எஸ்.ராஜ் முகமது,
ஏ.எம்.ஜி. விஜய்குமார், ஆர்.ஜி.பாபு,
அனைவரும் மாமன்ற உறுப்பினர் கே.பன்னீர்செல்வம் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.