திருச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான பயிற்சி நடந்தது.

தமிழ்நாடு அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களிலும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, அவள் கடை அடையாள அட்டை வழங்கி அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய பலன்களை பெறுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்வது குறித்தும் புதிய நிர்வாகிகளுக்கான கடமைகள் குறித்தும் மாநில பொதுச்செயலாளர் கே.வி திருப்பதி கேள்வி பதில்களுடன் கலந்துரையாடி பயிற்சி அளித்தார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரிய பயன்களை பெறுவதற்கான தொழிலாளர்களை அடையாளம் கண்டு முறையாக பதிவு செய்து கொடுக்கும் பணியில் திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களிலும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்டத் தலைவர் ஜி. கௌசல்யா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் ப.ஈஸ்வரி, மண்டல அமைப்புச் செயலாளர் வின்சென்ட் ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக மாவட்ட அமைப்புச் செயலாளர் சசிகலா பாலு அனைவரையும் வரவேற்றுப் பேசினார் முடிவில் மாவட்ட அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறி முடித்து வைத்தார்.


