திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது

S.I.R சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரவாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ளதை கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமையிலும் திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர்
மு. மதிவாணன் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிக்கோ இருதயராஜ் அப்துல் சமத் ஆகியோர் முன்னிலையில் 11-11-2025 . அன்று காலை 10.00 மணியளவில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அனைத்து நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


