திருச்சி தெற்கு மாவட்டத்தில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம் !

0 4

 

கழக முதன்மைச் செயலாளர் – அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு !

மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்
“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம் திருச்சி “கலைஞர் அறிவாலயத்தில்” நடைபெற்றது .

இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் – கே.என்.நேரு அவர்கள் பங்கேற்று வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றிய போது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்பிற்காக 40 நாட்கள் நாம் ஆற்றும் பணி என்பது, மீண்டும் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் ஆக்குவதற்கான பணியாக அமையும். எனவே அனைவரும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு, கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளையும் வென்றது போல, இந்த தேர்தலிலும் சாதனை படைத்திட, திருச்சி தெற்கு மாவட்டத்தில், 3 தொகுதிகளிலும் வெற்றியை உறுதிசெய்வோம்.

இக்கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், தொகுதி பார்வையாளர்கள் கதிரவன், மணிராஜ், அண்ணாமலை, மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, செந்தில், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநகர, நகர, பேரூர் வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.