திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்வேறு பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தலைமையில் கீழ்காணும் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்59_வது வார்டு கல்லுக்குழி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையினையும், 47_வது வார்டு சுப்பிரமணிய பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு மையத்தினையும்,50-வது வார்டு காஜா பேட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையினையும்,17_வது வார்டு அண்ணா நகரில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடம், ஆகியவை மக்களின் தேவைகளுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகர செயலாளர் மதிவாணன், DRO)திருமதி.ராஜலட்சுமி,மண்டலம்_2 கோட்டத் தலைவர் திருமதி.ஜெயா நிர்மலா,தாசில்தார் திரு. விக்னேஷ்,(AC)திருமதி.ஜெயந்தி,(AE)திரு.இப்ராஹிம்,திரு.செல்வராஜ் ,(JE)திரு.கணேஷ் பாபு,மதிமுக மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ரொக்கையா மாலிக், பகுதி செயலாளர்கள் மணிவேல்,.T.P.S.S ராஜ் முகமது ,மாமன்ற உறுப்பினர்கள் , . ரிஸ்வானாபானு. கீதா ,வட்டச் செயலாளர்கள் கணேசன் மூர்த்தி,ராஜேந்திரன், நாகவேணி மாரிமுத்து, ஞானசேகரன் மற்றும் அரசு அதிகாரிகளும் கழக நிர்வாகிகளும், தோழர்களும், பொதுமக்களும் உடன் இருந்தனர்.

