திருச்சியில், துவரங்குறிச்சி மற்றும் கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு.

0 6

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (ஆக 7) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக, துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், ஈடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிக் குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரிப்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, கல்லுப்பட்டி, அயன் பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளக்காம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி,பழையபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் பெல்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல, திருச்சி மாவட்டம் கல்லக்குடி துணை மின்நிலையத்திலிருந்து கே.கே.நல்லூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக கல்லக்குடி, பழனியாண்டி நகர், காமராஜபுரம், வரக்குப்பை, அளுந்தலைப்பூர், சிறுகளப்பூர், கருடமங்கலம், தாப்பாய், வந்தவைகூடலூர்,பெருவளப்பூர், விடுதலைபுரம், சிறுவயலூர், கே.கே. நல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.