திருச்சிராப்பள்ளிமாவட்ட காவல்துறை மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை சிறையில் அடைத்தனர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மணவளர்ச்சி குன்றிய சிறுமியை பக்கத்து தெருவை சேர்ந்த மதியழகன்(02) முசிறி என்பவர் அடிக்கடி திண்பண்டம் வாங்கிக் கொடுத்து தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் கடந்த 18.082025 அன்று பாதிக்கப்பட்ட சிறுமி மேற்படி எதிரி மதியழகனின் பின்னால் செல்வதை பார்த்து அவரது தாயார் கேட்ட போது மதியழகன் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியதன் பேரில் பாதிக்கபட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்படி எதிரி மீது முசிறி அனத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் 35/25 u/s 87 BNS, 5(k), 5(1) r/w 6(1) of POCSO Act & 92 of the Rights of persons Disabilities Act ன் படி 22.09.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2) இவ்வழக்கு சம்மந்தமாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
செ. செல்வநாகரத்தினம், இகாப, அவர்கள் மேற்படி குற்ற வழக்கின் எதிரியை பிடிக்கும் பொருட்டு முசிறி அனைத்து மகளிர் ஆய்வாளர் திருமதி வாணி என்பவருக்கு உத்தரவிட்டதின் பேரில் 220925 அன்று மேற்படி எதிரியை கைது செய்து கணம் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

