திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை தலைப்பு :திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது

0 4

தமிழ்நாடு அரசு ஆணை G.O. (MS) 351, dated: 10.07.2025 Home (Police-IX) Department, Secretariat, Chennai -ன் படி அனைத்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலும் காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது குழந்தைகள் பயன்பெறும் வகையில் காவலர் மன்றம் ஆரம்பிக்கப்பட அறிவுறுத்தியதன் பேரில் திருச்சிராப்பள்ளி மாவட்டம். ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை புதுப்பித்து, அதற்கு “காவலர் மன்றம்” என பெயரிட்டு, இன்று (25.02.2026) மாலை 16,30 மணிக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி மன்றத்தில் காவலர்களது குழந்தைகள் தங்களது ஒய்வு நேரத்தை பயனுள்ள விதமாக செலவிடும் வகையில் புத்தகங்கள், செஸ், கேரம்போர்டு மற்றும் வாலிபால், கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டு உபகரணங்களும்வைக்கப்பட்டுள்ளன. மேலும் மற்றும் 02- கணிணிகளும் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடும்படி காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.