திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை காரில் கடத்திவரப்பட்ட சுமார் 85 கிலோ கஞ்சாவை கைப்பற்றியது -கைது தொடர்பாக.

0 9

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இன்று (02.11.2025) மணப்பாறை விராலிமலை சாலையில் உள்ள ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் ரைஸ் மில் அருகில் மணப்பாறை போக்குவரத்து காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.வெங்கடாசலம் மற்றும் இரண்டாம் நிலை காவலர் PC 2534 திரு.தினேஷ்குமார் ஆகியோர் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்த பொழுது, DL 08 CY 5499 பதிவு எண் கொண்ட Renault Fluence காரை தணிக்கை செய்ய மறித்த போது. வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர். சந்தேகம் அடைந்த மேற்படி வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார் துரத்தி சென்று காரை மறித்த போது. காரில் வந்த நான்கு நபர்கள் காரை விட்டு விட்டு தப்பி சென்றனர். சம்பவம் குறித்து தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணப்பாறை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர். மணப்பாறை ஆகியோர் வாகனத்தை சோதனையிட்டதில் சுமார் 85 2 கிலோ கஞ்சாவை பதுக்கி எடுத்து வந்தது தெரியவந்தது.

 

. 2) மேற்படி சம்பவம் குறித்து, மணப்பாறை காவல் நிலைய குற்ற எண். 736/2025 u/s 8(c) r/w 20 (b) (II) (c) 25 of NDPS ACT -காரில், போலி பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டுகள்-5. மாரியப்பன் 25/25 த.பெ பிச்சைமணி, உத்தமபுரம், கம்பம். தேனிமாவட்டம் என்பவரது Employment ID கார்டு மற்றும் அஜித் 28/25 த.பெ தெய்வம். மந்தாய் அம்மன் கோவில் தெரு. கம்பம். தேனி மாவட்டம் (Aadhar No: 278684470751), 0 33/25 (Aadhar No: 245002759956) ஆகியோர்களது ஆதார் அட்டை நகல்கள் கிடந்தன. இதில், மேற்படி மாரியப்பன் என்பவர் மீது திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கஞ்சா (NDPS) வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய பிடிக்க திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரெத்தினம், இ.கா.ப.. அவர்களின் உத்தாவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவருகின்றனர்.

3) மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள். கஞ்சா விற்பனை. குட்கா விற்பனை. போலி மதுபான விற்பனை மற்றும் கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.