மகளிர் உரிமைத் தொகையா? தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி உட்கோட்டம், சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 427/25 u/s 309 (4) BNS வழக்கின் புகார்தாரரும், தங்கநகை மொத்த விற்பனையாளருமான (1) குணவந்த் (34/25), த/பெ. சுரேஷ், எண்.595-C, முதல் தளம், சக்திபுரம், விம்கோ நகர், எர்னாவூர், சென்னை என்பவர் (2) மகேஷ் ராவல் (20/25), த/பெ. தினிஷ் ராவல்ஆறுமுகம் தெரு, சவுகார்பேட்டை, சென்னை, (3) பிரதீப் ஜாத் (24/25) (ஓட்டுனர்), த/பெ. தூதரம், 308, பிச்சாகியோங் கா வாஸ், மல்கசானி, ஜோத்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஆகியோருடன் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தங்க நகை சில்லரை விற்பனையாளர்களிடம் விற்பனை செய்தது போக மீதமுள்ள சுமார் 10 கிலோ தங்க நகைகளோடு TN 04 BA 5157 பதிவு எண் கொண்ட Renault Kwid Car ல் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போது, திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட SRM மருத்துவமனை (திருச்சி சென்னை NH) அருகில், கடந்த 13.09.2025 அன்று இரவு சுமார் 2020 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்க தங்களது வாகனத்தை நிறுத்தியிருந்த போது கருப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத 4 மர்ம நபர்கள் மேற்படி புகார்தாரர் மற்றும் அவர் உடன் இருந்தவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி காரில் இருந்த 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர். உடனடியாக தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சமயபுரம் போலீஸார் மேற்படி கொள்ளையர்கள் பயன்படுத்திய கருப்பு நிற காரை குறித்து திருச்சி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாகன சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சமயபுரம் டோல்பிளாசா சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் பயன்படுத்தியது TN 06 W 0608 பதிவெண் கொண்ட கருப்பு நிற ஹூண்டாய் தெரியவந்தது. தொடர்ச்சியான விசாரணையில் மேற்படி கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண்ணானது போலி என்பதும், காரின் உண்மையான பதிவெண் 25 BH 4096 J என்பதும், அதன் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரை சேர்ந்தவர் என தெரியவந்தது.
2) மேற்படி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்கள் உத்தரவின் பேரில், வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. தினேஷ்குமார் அவர்களை நியமித்தும், காவல் ஆய்வாளர்கள் திரு. கருணாகரன், திரு. ரகுராமன் திரு. முத்தையன், திரு. குணசேகரன், மற்றும் திரு. கண்ணதாசன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்து கர்நாடகா ராஜஸ்தான் மகரராஷ்டிரா, பீகார் மற்றும் மத்தியபிரதேசம் மாநில காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து வெளிமாநிலங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.

3) மேற்படி இவ்வழக்கின் புகார்தாரரான குணவந்த் என்பவருடன் வந்த காரின் ஓட்டுநர் எதிரி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரான (1) பிரதீப் ஜாட் 24/25 என்பவர் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததும், இதில் தொடர்புடைய எதிரிகளான ராஜஸ்தானை சேர்ந்த (2) மனோகர் ராம் ஆகியோரை சென்னையில் வைத்து கைது செய்தும், மேற்படி எதிரிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ்நாடு, கர்நாடகா, மகராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களின் CDR, பல்வேறு வங்கிகளுடன் தொடர்புடைய சுமார் 12-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை ஆய்வு செய்தும், கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் சென்ற வழித்தடங்களை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சுமார் 15-க்கும் மேற்பட்ட டோல்பிளாசாக்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் 14.09.2025-ம் தேதி அன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரில் கர்நாடக காவல்துறையினர் உதவியுடன் மேற்கண்ட கொள்ளையர்களின் காரை கண்டுபிடித்தனர்.
4) அதனை தொடர்ந்து, காரை கண்டுபிடித்த இடத்திலிருந்து எதிரிகள் தப்பி செல்ல கூடிய வழிகளை ஆராய்ந்து அதில் 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளான ராஜஸ்தானை சேர்ந்த (3) பன்னாராம் தேவாசி (எ) வினோத் 31/25, (4) சொகைல்கான் (எ) முகமது சொகைல் 21/25, (5) கைலாஷ் 20/25, (6) ஹனுமான் ஜாட் 21/25 ஆகியோர்களை 24.09.2025-ஆம் தேதி பெங்களுருவில் கைது செய்யப்பட்டது. மேலும் தொடர்ச்சியான விசாரணையின் அடிப்படையில் ராஜஸ்தானை சேர்ந்த (7) மனிஷ் (எ) மனிஷ் சிரோகி 19/25 என்பவனை 04.10.2025-ஆம் தேதி சென்னையில் வைத்தும் கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய மூளையாக செயல்பட்ட (8) மங்கிலால் 22/25 மற்றும் (9) விக்ரம் ஜாட் 17/25 ஆகியோரை மத்தியபிரேதச மாநிலம் பட்வாணி மாவட்டத்தில் வைத்து கைது செய்தும் அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் (10) பரத் ராம் 35/25,கைது செய்தும் அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் (10) பரத் ராம் 35/25, (11) ராகேஷ் 28/25 மற்றும் ராகேஷின் மனைவி (12) லட்சுமி தேவி 25/25 ஆகியோரை 05.10.2025-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கைது செய்தனர்.
5) மேற்படி எதிரிகளை விசாரணை செய்து அவர்களிடமிருந்து வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட 1) தங்க நகைகள் 6,234 kg, 2) தங்க கட்டிகள் -3.446 Kg (11 Pieces) என total 9.681 kg தங்கம், பணம் 3) 6,05,500, 4) Hyundai Venue Car-25 BH 40963, 5) பிஸ்டல் (நாட்டுத்துப்பாக்கி) -1 மற்றும் 2 தோட்டாக்கள், 6) ஸ்மார்ட் போன் 7, 7) பட்டன் போன் -1, 8) சிம் கார்டுகள் 40, 9) 100 ரூ பத்திரம்-2, 10) ஜூவல் டேக் -5, மற்றும் 11) விசிட்டிங் கார்டு 5 ஆகியவை கைப்பற்றப்பட்டது.
6) இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் மேற்படி மாநிலங்களில் கடந்த 20 நாட்களாக முகாமிட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து எதிரிகள் மற்றும் வழக்கு சொத்தை திறம்பட மீட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு. தினேஷ்குமார் மற்றும் திரு ராஜமோகன் ஆகியோர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் திரு. கருணாகரன், காணக்கிளியநல்லூர் காவல் நிலையம், திரு. ரகுராமன், சமயபுரம் காவல் நிலையம், திரு. முத்தையன், துறையூர் காவல் நிலையம், திரு.குணசேகரன், ஜீயபுரம் காவல் நிலையம், திரு. கண்ணதாசன், மணிகண்டம் காவல் நிலையம், திரு. வீரபாண்டியன், கொள்ளிடம் காவல் நிலையம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு.வினோத், திரு.ஜெகதீசன், திரு.ரியாஸ்கான், திரு.வேலழகன், திரு.சந்திரசேகர், திருமதி.ஜோதிலட்சுமி மற்றும் தனிப்படையில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து காவல் ஆளிநர்களையும், சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.அருண்குமார், சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் திரு.அபுதாஹிர், திரு.பத்மநாபன், திரு. காதர் பாட்ஷா, திரு. கார்த்திக் மற்றும் திரு. பூபதி ஆகியோரின் மெச்சதகுந்த பணியை வெகுவாக பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கியதுடன், மேற்படி தனிப்படையினர்களுக்கு காவல் தலைமை இயக்குனர், தமிழ்நாடு காவல்துறை அவர்களிடமிருந்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்க வேண்டி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க உதவிய பிற மாநில காவல்துறையினருக்கு நன்றியினையும், பாராட்டு சான்றிதழ்களை தமிழ்நாடு மாநில காவல் தலைமை அலுவலகம் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7) இந்த குற்ற வழக்கின் புலணாய்வு விசாரணையின் அடிப்படையில் கீழ்காணும் விழிப்புணர்வு செய்திகளை கடைபிடிக்க திருச்சி மாவட்ட காவல்துறை அறிவுறுத்துகின்றது. பெரு நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை சேர்க்கும் போது அந்த நபரின் பின்புலம் குறித்து உரிய விசாரணை செய்த பின்னரே வேலைக்கு சேர்க்க வேண்டும் எனவும், இது போன்று தங்கம், வைரம் போன்ற மதிப்பு மிக்க ஆபரணங்கள், விலை உயர்ந்த வணிக பொருட்களை வாகனங்களில் எடுத்து செல்லும் போது உரிய பாதுகாப்புடன் செல்லவும், இரவு நேர பயணங்களை தவிர்க்கவும் மற்றும் பயணம் தொடர்பான தகவல்களை தேவையில்லாத நபர்களிடம் பகிர்வதை
அதிகளவில் தங்கம் வைரம் போன்ற மதிப்பு மிக்க பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் இயற்கை உபாதைக்காக அல்லது வேறு காரணங்களுக்காக வாகனத்தை நிறுத்தும் போது ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதிகள் அல்லது பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்திட வேண்டும் எனவும், வாகன பதிவெண் பலகைகள் (Vehicle Number Plate) தயாரிப்பாளர்கள்/விற்பனையாளர்கள் மற்றும் வங்கிகளால் வழங்கப்படும் போன்றவற்றை வழங்கும் போது சம்மந்தப்பட்ட வாகனத்தின் உரிய அசல் ஆவணங்களை பெற்று அதன் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்திட வேண்டும். மேலும் இது போன்ற அவசர உதவி தேவைப்படும் சூழ்நிலைகளில் பொதுமக்கள் தமிழ்நாடு காவல்துறையின் காவல் உதவி மொபைல் செயலியை பயன்படுத்துதல் (Kaval Udhavi Mobile Application) மற்றும் போலீஸ் அவசர எண் 100-ஐ தொடர்பு கொள்வது மூலம் அவர்கள் இருக்குமிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள எளிதாக அமைந்திடும் எனவும் காவல் கண்காணிப்பாளர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அவர்கள் அறிவுறுத்தினார்.
X

