திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு எண், 20, மேலரண்சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 57 நில வாடகை கடைகள் வரியில்லா இனத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

0 5

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு எண், 20, மேலரண்சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 57 நில வாடகை கடைகள் வரியில்லா இனத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

மேற்கண்ட 57 நிலவாடகை கடைகளுக்கான நிலவாடகை மறுநிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் மீது 30.04.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் நிலவாடகை தொகையை இறுதி செய்வதற்காக குத்தகைதாரர்களுக்கு நேரடி விசாரணைக்கு வாய்ப்பு வழங்குமாறும், மேற்படி உத்தரவில் விசாரணை இறுதி செய்யப்படும் வரையில் 14.03.2021 முதல் 13.03.2024 வரை உள்ள காலத்திற்கு ஒரு சதுரஅடிக்கு ரூ.10/- எனவும், அதன் பின் 14.03.2024 முதல் நாளது தேதி வரை வருடத்திற்கு 15% உயர்வு வீதம் மேல்முறையீட்டுதாரர்களால் செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்திரவிடப்பட்டிருந்தது.

மேலும் மாநகராட்சி குத்தகை பதிவுகளில் உள்ள குத்தகைதாரர்களுக்கு வாடகை இறுதி செய்வது தொடர்பாக நேரடி விசாரணைக்கு வாய்ப்பு வழங்கும் பொருட்டு 22.07.2025 மற்றும் 23.07.2025 ஆகிய இரு தினங்களில் நேரடி விசாரணைக்கு குத்தகை உரிமத்திற்கான ஆவணங்களுடன் விசாரணையில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.

மேலும் அரசு வழிகாட்டுதல் மதிப்பின் படி மாதம் ஒன்றுக்கு ஒரு சதுரடிக்கு ரூ.59/-வீதம் வாடகையாக 2021ல் நிலவாடகை இறுதி செய்யப்பட்டு நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்துமாறு 03.09.2025 மற்றும் 26.09.2025ல் நிலுவை வாடகை தொகையில் தங்கள் செலுத்திய தொகை போக மீதம் உள்ள நிலுவைத் தொகையை அறிவிப்பை பெற்றவுடன் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. தவறும்பட்சத்தில் அரசு வழிகாட்டுதலின்படி மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.