நடப்பு ஆண்டில் 6வது முறை நிரம்பியது மேட்டூர் அணை!

0 4

 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நடப்பாண்டில் மே ட்டூர் அணை 6வது முறையாக நிரம்பி உள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் – கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

இன்று காலை நடப்பாண்டில் மேட்டூர் அணை 6வது முறையாக நிரம்பி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 31,854 கனஅடியில் இருந்து 36,985 கன அடியாக அதிகரித்துள்ளது. 23 ஆயிரத்து 300 கன அடி நீர் டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது அணையில் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கரையார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.