திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்றும், நாளையும் நடைபெறும்

0 6

திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்யில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்றும், நாளையும் நடைபெறும் முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழகம்முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌.

மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்சியில் வாழவந்தான் கோட்டை புது பர்மா காலனி பழைய பர்மா காலனி அய்யம்பட்டி தொண்டமான் பட்டி பெரியார் நகர் ஆகிய பகுதிகளைகொண்ட பன்னிரண்டு வார்டுகள் உள்ள ஊராட்சியில் சுமார் 12,500க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்
மேலும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் உங்களுடன்
ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு
முகாமில் அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து
பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்
மேலும் முகாமில் வருவாய்த்துறை சார்பாக நத்தம் பட்டா 6 பேருக்கும் இதே போல் வகுப்பு வாரிசான்றிதழ் 2 பேருக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

மேலும் இந்தமுகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை ஊராட்சி செயலாளர் கண்ணன். திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி மற்றும் ஊராட்சியைச் சார்ந்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.