மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி உறையூர், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழா நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.

0 16

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி உறையூர், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழா நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு, அரசு உதவி மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் குழந்தைகள் தினமான இன்று (14.11.2025) சிவகங்கை மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது.ள

அதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு, அரசு உதவி மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை குழந்தைகள் தினமான 14.11.2025 இன்று திருச்சிராப்பள்ளி உறையூர், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என் நேரு அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 103 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 67 அரசு உதவி, பகுதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.10.89 கோடி மதிப்பீட்டில் 11ஆம் வகுப்பு பயிலும் 10345 மாணவர்கள் மற்றும் 12243 மாணவிகள் என மொத்தம் 22588 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.