ஹேர் கலரிங் தலைமுடியுடன் வந்த மகள்.. திருச்சி பெண் அரசியல்வாதி ஜெயந்தியா இது?

அரசியல்வாதி ஜெயந்தியா இது? யாருமே எதிர்பார்க்கலயே

0 3

ஹேர் கலரிங் தலைமுடியுடன் வந்த மகள்.. திருச்சி பெண் அரசியல்வாதி ஜெயந்தியா இது? யாருமே எதிர்பார்க்கலயே

திருச்சி: திருச்சி அருகே நிகழ்ந்த ஒரு குடும்ப சம்பவம் ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது… மனித உயிர்களின் மதிப்பை அறியாமல் சிலர் எடுக்கும் அவசரமான முடிவுகள், அந்தந்த குடும்பங்களையே நிலைகுலைய வைத்து விடுகின்றன.. . அப்படித்தான் திருச்சியில் இந்த பெண் எடுத்துள்ள முடிவும், அக்குடும்பத்தை நிலை குலைய வைத்து வருகிறது. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.. யாரிந்த பெண் நிர்வாகி?

திருச்சி நவல்பட்டு பர்மாகாலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி ஜெயந்தி.. 36 வயதாகிறது.. அதிமுகவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக பணியாற்றி வருபவர் ஜெயந்தி..

திருச்சி அதிமுக ஜெயந்தி கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகளில் ஜெயந்தி சிறந்து விளங்குபவர்.. தன்னம்பிக்கையும் செயல்பாடும் கொண்டவராக அரசியல் வட்டாரங்களிலும் அறியப்பட்டிருந்தார். ஜெயந்தி, விஜயன் தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெயந்தி தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்… இந்நிலையில்தான் அரசியலிலும் நாட்டம் வந்து, பணியாற்றியதுடன், பல பொறுப்புகளையும் ஏற்று நடத்தி வந்துள்ளார்.. தலைமுடிக்கு – ஹேர் கலரிங் மகள் இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை, வீட்டில் ஜெயந்தி மற்றும் அவரது மூத்த மகள் 18 வயது ஷாலினி இருந்துள்ளனர். அப்போது 17 வயது இளைய மகள் கிருஷ்மிளா என்பவர் தன்னுடைய தலைமுடிக்கு கலரிங் செய்து கொண்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஜெயந்தி அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி, மகளை கடுமையாக கண்டித்துள்ளார்.

இது கிருஷ்மிளாவுக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் தந்தது.. அதனால் அம்மா மீதுள்ள கோபத்தில் வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்களை தள்ளிவிட்டு உடைத்ததாக தெரிகிறது. மகளின் நடவடிக்கையை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி மேலும் கோபமடைந்தார்.. ஆவேசத்துடன் தனது ரூமுக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார் ஜெயந்தி.. மயக்க நிலையில் ஜெயந்தி அம்மா கோபத்தில் கதவை சாத்தி தாழிட்டு கொண்டதாக மகள்கள் நினைத்துள்ளனர்.. ஆனால், நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மகள்கள் கதவை தட்டியுள்ளனர்.. அப்போதும் அம்மா கதவை திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஃபேனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. மேலும், ஜெயந்தி மயக்க நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும், ஜெயந்தி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.. அம்மாவின் சடலத்தை கண்டு மகள்கள் இருவரும் கதறி அழுத காட்சி காண்போரை உலுக்க எடுத்துவிட்டது..

என்ன காரணம் – விசாரணை ஆனால், ஒரு சாதாரண விஷயம், தற்கொலை வரை சென்றது, திருச்சி மக்களை அதிர செய்துள்ளது.. அதிலும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிர்வாகியின் உயிரிழப்பு, அதிமுக வட்டாரத்திலும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. உண்மையிலேயே, மகள் ஹேர் கலரிங் செய்து கொண்டுவந்ததுதான் ஜெயந்திக்கு பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் மன அழுத்தத்தில் இதற்கு முன்பு இருந்து வந்தாரா? என்றெல்லாம் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.