பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பீஜிங்: ”நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு, அமைதி முக்கியம். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சீனாவில் ஷாங்காய் அமைப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ஷாங்காய் அமைப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவேற்பு அளித்த சீன அதிபருக்கு நன்றி. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா சாதகமான பங்கு வகித்து வருகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு, அமைதி முக்கியம். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் எஸ்சிஓ என்பது, எஸ்-பாதுகாப்பு, சி-இணைப்பு, ஓ-வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.
நட்பு நாடுகளுக்கு…!
அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையை இந்தியா வலியுறுத்துக்கிறது. குரல் கொடுக்கிறது.
ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், பாதுகாப்பும், அமைதியும், நிலைத்தன்மையும் அவசியம்.
பயங்கரவாதம்
ஆனால் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது.
பயங்கரவாதம் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கே ஆபத்து.
இதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமையை இந்தியா வலியுறுத்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

