தேநீர் கடையில் தேங்கி நிற்கும் வாகனங்கள் அவதிப்படும் பொதுமக்கள்

தேநீர் கடையில் தேங்கி நிற்கும் வாகனங்கள் அவதிப்படும் பொதுமக்கள். தஞ்சை மெயின் ரோடு வரகனேரி பஜாரில் அமைந்துள்ள ஜம்ஜம் என்ற தேநீர் கடையில் வரும் நபர்கள் அனைவரும் வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திக் கொண்டு காலையி லும் மாலையிலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதை அங்கே உள்ள மக்கள் தெரிவித்தனர் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் அவசரமாக வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் என அனைவரும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது இதை கேட்க வேண்டிய மாநகராட்சியும் போக்குவரத்து துறையும் மௌனம் காப்பது ஏன் என்று தெருவாசிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கேள்வி எழுப்புகின்றன இச்செய்தியை கண்டவுடனாவது போக்குவரத்து துறையும் மாநகராட்சியும் முன்வந்து மக்களுக்கு இடையூறு இல்லாமல் வழி வகுத்துதர வேண்டும் என்பதே இப்ப பகுதியில் வாழும் மக்களின் மேலோங்கிய கோரிக்கையாகவும் இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

