தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் எதிரிகளை கைது செய்து சிறையில் அடைத்தது





திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்துவரும் சுரேஷ் 35/25 த.பெ நடராஜன் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக தனது மனைவி மாதவி வீடான தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்தில் வசித்து வந்ததாகவும், இந்நிலையில் கடந்த 02.09.2025-ம் தேதி இரவு 0700 மணியளவில் மேற்படி சுரேஷ் 35/25 முள்ளிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது. இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் மேற்படி சுரேஷை அருவாளால் வெட்டி, தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு. தலையை எடுத்துகொண்டு தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், மேற்படி சுரேஷ் என்பவர் ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த கல்பேஸ் த.பெ உத்திரகுமார் என்பவரின் சகோதரர் தியாகு என்பவரை கடந்த 2024-ம் ஆண்டு சேலம் மாவட்டம், சூரமங்கலம் காவல் நிலைய பகுதியில் கொலை செய்ததாகவும், இதன் காரணமாக மேற்படி சுரேஷை, 1) கல்பேஸ் 35/25 த.பெ உத்திரகுமார், ஆலத்துடையான்பட்டி 2) அஸ்வின்குமார் (எ) படையப்பா 26/25 த.பெ முருகேசன், ஆலத்துடையான்பட்டி, 3) பரமேஸ்வரன் 26/25 த.பெ முருகேசன், முள்ளிப்பாடி ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். அச்சமயம், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் தொட்டியம், கொளக்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதுகாப்பு பணியில் இருந்தமையால், தகவல் கிடைத்த ஒரு மணிநேரத்திற்குள் மேற்படி கொலையாளி பரமேஸ்வரனை உடனடியாக கைது செய்து, அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் முள்ளிப்பாடி ஏரியில் உள்ள புதரில் மேற்படி கொலையுண்ட சுரேஷின் தலையை கைப்பற்றப்பட்டது. மேற்படி கைது செய்யப்பட்ட பரமேஸ்வரனை 03.09.2025-ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2) இதுதொடர்பாக, தொட்டியம் காவல் நிலைய குற்ற எண். 384/25 u/s 103(1), 351(3), 238(a) BNS வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில், மேற்கண்ட மீதமுள்ள கல்பேஸ் 35/25 த.பெ உத்திரகுமார். ஆலத்துடையான்பட்டி, அஸ்வின்குமார் (எ) படையப்பா 26/25 த.பெ முருகேசன். ஆலத்துடையான்பட்டி மற்றும் உடந்தையாயிருந்த கவியரசன் 32/25 த.பெ உத்திரகுமார். ஆலத்துடையான்பட்டி மற்றும் பிரவீன் (எ) முகமது 31/25 த.பெ உத்திரகுமார், ஆலத்துடையான்பட்டி ஆகியோரை இன்று (04.09.2025) கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
3) மேலும், கொலைக்கு பயன்படுத்திய அருவாள்கள் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

